{"title":"M Karunanidhi","description":null,"products":[{"product_id":"thaaimai-book-m-karunanidhi-9788198822956","title":"Thaaimai","description":"\u003cp\u003eசரசத்தாலும் சாகசத்தாலும் எப்படியோ அரசியின்மீது அரசனுக்கு இருந்த அன்பை அழித்துவிட்டேன். அரசனது இருதயத்திலே அழியாத சித்திரமாக அமர்ந்திருந்தாள் அந்தக் கோப்பெருந்தேவி. அந்தக் கலையாத ஓவியத்தைக் கரிகொண்டு மெழுகிவிட்டேன். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eமன்னனின் மன மாளிகையில் ஜோதி விளக்கு அவள். ஒரு காலத்தில்  அந்த ஜோதி விளக்கு இன்று வீதியிலே வீசப்பட்டுவிட்டது. தோழிகள் புடை சூழ- தோகை மயில்கள் ஆடும் நந்தவனத்தில் மலரால். நடை பாதை அமைத்து, அவளும் அரசரும் ஆனந்த பவனிகள் நடத்தினரே-அது அந்தக் காலம். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஇப்போது வேந்தரின் இருதயத்தில் இந்த சுழற் கண்ணியின் சுந்தர ரூபம் பூஜை அறைப் படம்போல ஜோடித்து வைக்கப்பட்டிருக்கிறது. வேந்தரின் மடியும், மலைத் தோளும் அவளுக்குச் சொந்தம் ஒரு காலத்தில்  இன்றோ என் சொல்லுக்குச் சுழலும் மாயப் பதுமை'' யாகி விட்டார். மணிமுடி வீரர்   இது எனக்கு வெற்றி தான்--ஆனாலும் என் மனம் அமைதியடையவில்லை. அரசரின் பாசத்தையும் நேசத்தையும் இழந்தாள் எனினும் பட்டத்து ராணி என்ற மதிப்பை இழந்தாள் இல்லை. அவளது மகன்தான் கிரீடத்துக்குச் சொந்தக்காரன் என்ற பாத்யதையைப் பறிகொடுத்தாள் இல்லை. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஇந்த நிலையில் எனக்கு நிம்மதி ஏது மைத்துனரே  ஊரெல்லாம் அவள் பக்கம் அனுதாபம் காட்டுகிறது. அரசரும் அவளும் பிரிந்திருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட எதிர்பாராத கேடு என்று புலம்புகிறது மக்கள் மன்றம். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஎன்னுடைய குணாதிசியங்களைக் கொற்றவன் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை; அதனால் என் வலையில் வீழ்ந்து விட்டார் - என்று மந்திரிகளின் குழு மாரடித்து அழுது கொண்டிருக்கிறது. இளையராணி நான்-என்கிற மதிப்பைக்கூடத் தர மறுக்கிறது அரண்மனை வட்டாரம். \u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52762880409873,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52762881032465,"sku":"NIN9788198822956","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198822956.jpg?v=1782887103"},{"product_id":"vaazha-mudiyathavargal-book-m-karunanidhi-9788198837509","title":"Vaazha Mudiyathavargal","description":"\u003cp\u003eதோழர் மு. கருணாநிதி அவர்களின் கற்பனை உள்ள ஊற்றிலிருந்து ஊறியெழுந்து, விளிம்பு முட்டி, வழிந்தோடிய கதை ஓடுகால்களை ஒன்றாக இணைத்து, உள்ளங்கவர் ஒரு பெரும் நூற்புனலாக ஆக்கித்தரும் பெரும் பணியினை, திராவிடன் பதிப்பகத்தார் ஏற்று, வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். இந்தப் புனல் நாடெங்கும் பாய்ச்சப்படுகிறது, திராவிடன் பதிப்பகத்தாரால், கலையார்வங் கொண்டோர் அனைவரும் மாந்தி மகிமும் பொருட்டு. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதோழர் மு.கநுணாநிதி அவர்கள் ஆண்டி விளைஞர் எனினும், மிகக் குறுகிய காலத்தில் நாட்டு மக்களின் பேரன்பைக், கதை-கவிதை-காவியம்-கட்டுரை-நாடகம்-- நடிப்பு-பேச்சு- எழுத்து இன்ன பிறவற்றால் பெரிதும் கவர்ந்து விட்டார் கருணாநிதி' என்ற சொல் மக்களின் காதில் விழும் போதெல்லாம் அவர் பேச்சைக் கேட்க-அவர் எழுத்தைப் படிக்க - அவர் நடிப்பைக் காண ஆவலுற்று நிற்கிறார்கள் மக்கள். அத்தகையவரால் எழுதப்பட்ட இந்நூலின் அருமை பெருமைகளை விரித்துக் கூறி விளங்க வைக்கவேண்டிய அவசியமேயில்லை.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபடிப்போர் அனைவரும் அவற்றை எளிதில் உணர்வர். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஆறு கதைகள் இதன்கண் இணைக்கப்பட்டிருக்கின்றன. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eவாழமுடியாதவர்கள் - வாழ முடியாதவன், வாழி வைக்கப்பட முடியாதவள் ஆகியோரின் வாழ்க்கைச் சித்திரம் அழகுறத் தீட்டப்பட்டிருக்கிறது. \u003c\/p\u003e\u003cp\u003eஒரிஜினலில் உள்ளபடி- ஏமாற்றித் திரியும் மத எத்தன் அவனது வஞ்சக வாழ்க்கையோடு முன் கொண்டுவந்து நிறுத் தப்படுகிறன். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகங்கையின் காதல்- புராணக் கதை கேலிச் சித்திர மாக்கப்பட்டிருக்கிறது; நகைச்சுவை ததும்புகிறது. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகண்டதும் காதல் ஒழிக- காதலுக்குக் கண்ணில்லை என்று காட்டப்பட்டு, கண்டதும் காதல் ஒழிக என்று போய் முடிகிறது. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52762903478545,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52762904330513,"sku":"NIN9788198837509","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198837509.jpg?v=1763603609"},{"product_id":"sinthanai-aazhi-book-m-karunanidhi-9788198881441","title":"Sinthanai Aazhi","description":null,"brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52762904297745,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52762905149713,"sku":"NIN9788198881441","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198881441.jpg?v=1763603610"},{"product_id":"nanmanimalai-book-m-karunanidhi-9788198873675","title":"Nanmanimalai","description":"\u003cp\u003eசுவைசொட்டும் கருத்துவளமிக்க உரையாடல்களைக் கொண்ட கலைஞர் அவர்களின் 'சிறு நாடகங்களி'ன் தொகுப்பே இந்நூல்  \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபகுத்தறிவுக் கருத்துக்களின் ஒளிவீச்சாக - அன்பு இதயங் களின் இன்ப கீதமாக - புன்மைமனம் படைத்தோரின் பொய் யுரைகளைக் கிழித்தெறியும் அறிவு வாளாக பண்டைத்தமிழரின் வீரத்தை தன்மான உணர்வினை விளக்கிடும் உணர்ச்சிக்காவியமாக; தமிழர்தம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட நான்கு சிறு நாடகங்கள் முறையே, பரதாயணம் - திரைப்படங்களில் இடம் பெற்ற அனார்கலி-சாக்ரடீஸ்-சேரன் செங்குட்டுவன் ஆகிய இந்நூலில் அடங்கியுள்ளன. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதன்மான உணர்வும் தமிழ்ப்பற்றும் மிகுந்த தமிழ்ப்பெரு மக்களுக்கு இந்நூலினை நல்விருந்தாக வழங்குகிறோம்  குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தருகிறோம். என்றும்போல் ஆதரவு தருக ஆக்கம் பெருகிட; \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஇது ஒரு நான்மணி மாலை  \u003c\/p\u003e\u003cp\u003eபகுத்தறிவு பரப்பிட \u003c\/p\u003e\u003cp\u003eபாசமிகு காதலர்களின் \u003c\/p\u003e\u003cp\u003eஅன்புப் பெருக்கை விளக்கிட, \u003c\/p\u003e\u003cp\u003eஉலகைத் திருத்த முனைந்த \u003c\/p\u003e\u003cp\u003eஉத்தமன் ஒருவனின் \u003c\/p\u003e\u003cp\u003eமன உறுதிக்கு மகுடம்புனைந்திட, \u003c\/p\u003e\u003cp\u003eதமிழர் வீரம் \u003c\/p\u003e\u003cp\u003eதிக்கெட்டும் வெற்றிக்கு கொடிநாட்டிய \u003c\/p\u003e\u003cp\u003eதீரமிகு வரலாற்றைச் சொல்லிட \u003c\/p\u003e\u003cp\u003eஇந்த நான்கு மணிகளையும் \u003c\/p\u003e\u003cp\u003eகோத்துள்ளேன் மாலையாக  \u003c\/p\u003e\u003cp\u003eபலமுறை கேட்டது   படித்தது   \u003c\/p\u003e\u003cp\u003eஅரங்குகளில் நடித்தது  இருப்பினும் \u003c\/p\u003e\u003cp\u003eஉங்கள் நூலகத்திலும் அழகுசெய்யட்டுமே \u003c\/p\u003e\u003cp\u003eஎன்பதற்காக, இந்த இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eவெளியீட்டு உரிமையுடைய தமிழ்க்கனி பதிப்பகத்தாருக்காக அன்பு நண்பர் மோகனவேலு அவர்கள் எழிலுற இந்த நூலைப்பதிப்பித்து வழங்குகிறார். அவருக்கு நன்றி. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52933920194833,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52933921014033,"sku":"NIN9788198873675","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198873675.jpg?v=1765822993"},{"product_id":"nadutheru-narayani-book-m-karunanidhi-9788198822970","title":"Nadutheru Narayani","description":"\u003cp\u003eவிடிந்தால் தீபாவளி- இரவு முழுதும் ஊரெங்கும் வாண வேடிக்கைகள். தெருவுக்குத் தெரு- வீட்டுக்கு வீடு - போட்டி போட்டுக் கொண்டு வாணம் கொழுத்தி மகிழ்ந்தனர். சந்தர்ப்ப வாதிகளின் பச்சோந்தி உள் ளம் போல மத்தாப்புகள் பல நிறம் காட்டின. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஒரு சில அரசியல் தலைவர்களின் போராட்ட அறிவிப்புகள் போல அவுட் வாணங்கள் ஆகாயத்தில் கிளம்பின. ஆனாவுக்கு ஆனா கானாவுக்குக் கானா என்ற விதத்திலே எழுதப்படும் அர்த்தமற்ற அடுக்குச் சொல் வசனம் போல சீன வெடிகள் - ஊசிப்பட்டாசுகள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டன. புதிய ஆடைகளைக் கண்டு பூரிப்புத் தவழ ஓடி ஆடினர் சிறுவர், சிறுமியர். தலைத் தீபா வளிக்கு வந்திருக்கும் தம்பதிகள் உபசாரங்களுக்கும் - கிண்டல் உபத்திரவங்களுக்கு மிடையே - உல்லாசப் பொழுது போக்கினர். ஊரே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அந்த இரவில், நாராயணி மட்டும் சோகத்தின் நிழலாக தன் வீட்டில் அமர்ந்திருந்தாள். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதீபாவளி தமிழரின் திருநாளல்ல; தமிழரின் இறந்த நாளைக் கொண்டாடும் ஆரியப் பண்டிகை. கருத்துக்கு ஒவ்வாத கதை அளப்பு. அதை நமது பண்டிகையாகக் கொண்டாடிக் குதூகலிப்பது குருட்டுக் கொள்கை. ஆகவே, அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதல்ல நாராயணியின் எண்ணம்  அவள் அவ்வளவு அறிவு வளர்ச்சி பெற்றவளுமல்ல. போட்டி போட்டுக் கொண்டு புராணக் குட்டை யிலே மூழ்கி எழும் பெண்மணிகளின் வரிசையிலே அவளும் ஒருத்தி தான். ஆயினும் அவள் தீபாவளி கொண் டாடவில்லை. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகாதைத் தொடமுயலும் கண்களும், காண்பவரைக் கவரும் விதத்திலே அமைந்த உடற்கட்டும் பெற்ற நாராயணி தன் வீட்டு முகப்பிலே அமர்ந்து, தீபாவளி விழாவில் கலந்து மகிழும் ஊராரைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52962605990161,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52962606645521,"sku":"NIN9788198822970","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198822970.jpg?v=1782887104"},{"product_id":"sirayil-pootha-chinna-chinna-malargal-book-m-karunanidhi-9788198841025","title":"Sirayil Pootha Chinna Chinna Malargal","description":"\u003cp\u003eமுதலாளித்துவத்தின் உடம்புக்குள் உணவாகச் செல்லு கிற தொழிலாளர் வர்க்கம் தேவையான இரத்தத்தை அளித்துவிட்டுக் கழிவுப் பொருளாக வெளியேறுகிறது. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதாயை ஒருவன் கற்பழிக்க முயல்வதைக் கண்டும், காணாதது போல ஒரு மகன் இருப்பானேயானால், அவன் தனது தாய் மொழியைப் பிறமொழி அடிமை கொள்வதையும் பொறுத்துக் கொண்டுதான் இருப்பான். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஉலகைத் திருத்தும் உத்தமன் என்று ஒருவன் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டான். அவன் வீட்டு நிலைக்கண்ணாடிக்கு ரசம் பூசப்படவில்லை. காரணம்; அவன் முகம் அதில் தெரிந்துவிடும் என்பதுதான்  \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகடலின் அலைகள் கடும் புயலைப் பயன்படுத்திக் கொண்டு வானத்தைத் தொட்டுவிடலாம் என்று உயர்ந்து உயர்ந்து பார்க்கின்றன. தொட முடியாத கோபத்தால், தன்னைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூமியின் ஒரு பகுதியை அழிக்க முனைகின்றன. அரசியல்வாதிகள் கூடச் சில பேர் அப்படித் தான் தங்களை வளர்த்த இயக்கத்தை அழிக்க முனைகிறார்கள். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eசிறையில் இருந்த ஓர் அரசியல் கைதிக்கு நாவல்கள் படிப்பதிலோ, இலக்கியங்கள் படிப்பதிலோ நாட்டமில்லை. நெப்போலியன், அலெக்சாண்டர், லெனின், நேரு, நேத்தாஜி, கட்டபொம்மன், பகவத் சிங், சிதம்பரனார் போன்றவர்களின் தியாக வாலாறுகளையும், வீர வரலாறுகளையும், தவிர வேறு எந்த நூலையும் அவர் கையால் தொடுவதில்லை. இப்படி, அந்த மாவீரர்களின் சரித்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தவரை, ஒருநாள் காலை சிறைக்கூண்டில் காணவில்லை. எங்கே என்று விசாரித்தபோது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியே போய்விட்டார் என்று சிறைக் காவலர் ஒருவர் விடையளித்தார். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52979579355409,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52979579945233,"sku":"NIN9788198841025","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198841025.jpg?v=1782887104"},{"product_id":"thudikkum-ilamai-book-m-karunanidhi-9788198822901","title":"Thudikkum Ilamai","description":"\u003cp\u003eதி.மு.க. முன்னணி எழுத்தாளர் -கலைஞர் கருணாநிதியின் எழுச்சியூட்டும் எழுத் தோவியங்களே இப் புத்தகம். \u003c\/p\u003e\u003cp\u003eமக்கள் அனைவரும் படித்துப் பயன்பெற மாநில மாநாட்டன்று வெளியிட்டுள்ளோம். \u003c\/p\u003e\u003cp\u003eஇதனை வெளியிட அனுமதி தந்த தோழர் மு. கருணாநிதி அவர்களுக்கு எமது நன்றி கலந்த வணக்கம். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதலைவரே  தாய்மாரே  திராவிட மாணவ மணிகளே  வணக்கம். இந்த ஆண்டு விழாவிலே நான் பேசவேண்டியது துடிக்கும் இளமை  துடிப்பு எல்லைக் கோட்டைத் தாண்டி விடுவதும் உண்டு. அஃது என் குற்றமல்ல. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதுடிக்கும் இளமை  ஆம் இளமை துடிக்கிறது. கோலநிலா வந்து கொஞ்சுகின்ற இரவில் காதலன் துடிக்கிறான். காதலி வரவில்லை. அவளுக்கு வீட்டிலே கட்டுப்பாடு அப்படி  மற்ற நாடுகளின் நிலைகண்ட அளவிலே நிலா கண்ட காதலனின் நிலை பெற்ற இளமைக்கு, திராவிட நாட்டுக் குடிமகனாக வாழவேண்டுமென்ற ஆவல் துடிக்கிறது. துடிப்பது ஆவல் மட்டுமல்ல  ஆரிய அரசு கண்டு ஆத்திரமுங்கூட, திராவிடர் நிலைகண்டு இரக்கமிருப்பினும் இனத்திற்கு இழுக்கு விளைக்கும் இழிமகனே  ஈட்டி வருவதற்கு முன் இறந்துபோ  என்ற எச்சரிக்கை எழுப்பும் பாசறையாக உள்ளது இளைஞர் இதயம். அமைதியோடு செயல் புரியும் ஆற்றல் இல்லையா என்று அஹிம்ஸா பிம்பங்கள் வினவலாம். கலிங்கத்தை வென்ற பிறகுதான் அசோகனுக்கு அமைதி ஏற்பட்டதாம். மதவாத மடமையை மஞ்சத்திலமர்த்தி, முதலாளிக் கொடுமையை முத்தமிட்டுக் கிடந்த ஜாரும், ரஸ்புடீனும் சாய்ந்த காரணம் சாந்த குணம் படைத்த லெனினால் அல்ல. உத்வேகத்தால் உந்தப்பட்ட ஓர் புரட்சிக்கார லெனினால்தான் அது முடிந்தது. ரஷ்யாவிலே தொழிலாளர் துயர் துடைத்தது துடிப்பின் முடிவு என்பதை யாரே மறுக்க முடியும். \u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":53010921619729,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53010921947409,"sku":"NIN9788198822901","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198822901.jpg?v=1782887102"},{"product_id":"thenalaigal-book-m-karunanidhi-9788198841063","title":"Thenalaigal","description":"\u003cp\u003eகதை, கட்டுரை, நாடகங்கள் தீட்டும்போது நான் கையாளும் தமிழ் நடையை முற்றிலும் மாற்றி ஒரு புதிய முறையைப் புகுத்த வேண்டுமெனக் கருதியதன் விளைவாக 'முத்தாரம்' திங்கள் இதழில் தொடர்ந்து பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை-இலக்கிய வளங்களை -இன்றைய விடுதலை வேட்கையை-புத்தம் புதிய நடையின் துணைகொண்டு மிக அழகாகச் சொல்ல முடியும் என்பதை உணர்ந்தேன்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதமிழார்வம் படைத்த நண்பர்களும் - புலவர் பெரு மக்களும் என்னை ஊக்குவித்தனர். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகவிதையுமல்லாமல் உரைநடையுமல்லாமல் 'கவிதை நடைச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் வெளிவந்த பன்னிரண்டு கதைகளை முத்துவேல் பதிப்பகத்தினர் தேனலைகள் என்ற நூல் வடிவில் உங்களிடம் தருகின்றனர். \u003c\/p\u003e\u003cp\u003eஅடுத்த பதிப்பு இன்னும் அழகுடனும் சிறு சிறு பிழைகள்கூட இல்லாமலும் வெளிவரும் என்று நம்பி, அவர்கட்கு என் உளங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதழைத்துக் குலுங்கும் தண் மலர்ப் பொழில். ஆங்கு மழைக் கூந்தற்காரி-பேரழகி யொருத்தி  அவள் இழைக்குப் பொன் வேய்ந்த துகில் பூண்டு நிற்கின்றாள், அணைக்கும் காதலனை அழைக்கும் கண் கொண்டு-கன்னங்களில் தேன் மொண்டு  கிள்ளை அவள் பெயர். பல், முல்லை   இதழ், சர்க்கரை வில்லை   \u003c\/p\u003e\u003cp\u003eஅவனோ தமிழழகன். இளவணிகன். பருவ மயில் ஆடுதற்கு முகில் கூட்டும் கண்ணுடையான். வளரும் மலைத்தோளுடையான், வளவன் பெயரால்  \u003c\/p\u003e\u003cp\u003eஅவன், விற்காட்டும் புருவத்தாளை - தற்காத்துத் தற்கொண்டான் பேணுகின்ற கற்பு கருவத்தாளை-சந்திக்க வருகின்றான், பந்திக்கு முந்துகின்ற பசிகாரன் வேகத்தில்  \u003c\/p\u003e\u003cp\u003eகனிமரங்கள் தலை நாணும்-அவள் எழில் வந்து தருவாய் நிற்கின்ற காட்சி கண்டு  \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":53010921652497,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53010921980177,"sku":"NIN9788198841063","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198841063.jpg?v=1768010180"},{"product_id":"pazhakoodai-book-m-karunanidhi-9788198837554","title":"Pazhakoodai","description":"\u003cp\u003eகலைஞர் கருண நிதியின் கற்பனைச் சோலையிலே குலுங்கிடும் கனிகள், காலத்தின் தூதுவர்களுக்குக் கருத்துச் சுவையை வாரி வழங்குபவை. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபுளிக்கிறது எனப் புலம்பிடும் புதுமைப் பகைவர்களும், கசக்கிறது எனக் கதைத்திடும் கடவுள் தூதர்களும் - யாரும் காணாத இடத்திலே கருணாநிதியின் கற்பனைக் கனிகளைச் சுவைத்து மகிழ்கிறார்கள். 'அருமை அருமை' என அகமும் முகமும் மலரப் பாராட்டுகிறார்கள். தீண்டினால் திரு நீலகண்டம் எனத் துள்ளிக் குதிப் போரும், தென்றலின் இனிமையிருக்கிறதப்பா அந்த எழுத்திலே என்று திரைமறைவிலே திண்ணைப் பேச்சு நடத்துகிறார்கள். பகுத்தறிவுப் புரியினர்க்குப் படைக்கலமாக, பழமை வாதிகளுக்கு ஒளிவிளக்காக, அமைந்திடும் எழுத்துச் சித்திரங்களைத் தீட்டுவதிலே கருணாநிதி வல்லவர். சலியாத உழைப்பென்னும் எருவிட்டு, கொள்கை, லட்சியம் என்கின்ற கனி மரங்களை வளரவிட்டு, கர்மவீரர்களுக் குக் களைப்புப் போக்கும் வகையிலே களிப்பூட்டும் தன்மையிலே அறிவுக் கனிகளை அவர் அளித்திடத் தவறியதே யில்லை. அங்ஙனம் அவர் தந்த கனிகளிலே ஐந்து கனிகளைக் கூடையிலே எடுத்து வைத்து அழகு தமிழ் குமரியொருத்தி இலக்கிய வீதியிலே நடை போடுகிறாள். அவளுக்கும் உங்களுக் கும் இடையிலே நின்று, பழ வியாபாரத்தைத் தடை செய்ய நாம் விரும்பவில்லை. சுவையுங்கள் அந்த எழுத்துக் கனிகளை  \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eசிறைச்சாலை இரவு நேரம் \u003c\/p\u003e\u003cp\u003e சங்கு, சந்தனம் என்ற இரண்டு கைதிகள் பேசிக் \u003c\/p\u003e\u003cp\u003eகொண்டிருக்கிறார்கள் ] \u003c\/p\u003e\u003cp\u003eசங்கு என்னா சந்தனம் அண்ணே  சந்தோஷம்தான் உனக்கு, நாளைக்கு விடுதலையாகப் போறே  உம்-அச்சடிச்ச சோறும் அவுன்ஸ் குழம்பும் வேப்ப மரத்து காத்தும், வேர்க் கடலை உருண்டையும்-இன்னையோட சரி-இல்லையா? \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53015508615441,"sku":"NIN9788198837554","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198837554.jpg?v=1768164708"},{"product_id":"ina-muzhakkam-book-m-karunanidhi-9788198841049","title":"Ina Muzhakkam","description":"\u003cp\u003eஇந் நூலில் வந்துள்ள கட்டுரைகள் கலைஞர் கருணாநிதி அவர்கள் அவ்வப்போது முரசொலி முதலிய பத்திரிகை களில் எழுதியவையாகும். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபாடல்கள் கவிதையல்ல என்ற நூலாக 1945-ல் வெளி வந்தது. இதனைத் தொடுத்து நூலாக வெளியிட்டுக் கொள்ள அனுமதி அளித்த ஆசிரியருக்கு எழுது பண்ணையின் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேம். \u003c\/p\u003e\u003cp\u003eகருணாநிதி அவர்களின் பிற நூல்களைப் போன்று இந் நூலும் மங்கிக் கிடக்கும் தமிழினத்தின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி அப் பெருமக்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் சொல்வதைக் காண்பீர்கள். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகோவலனையே என் நெஞ்சாரக் காதலித்தேன். கணிகையர் குலத்தில்தான் பிறந்தேன். ஆனால் வாழ விரும்பவில்லை. விஷங்கலவாத நீரோடை என் காதல். என் காதலைப் பாலைவன மாக்கி என் கருத்தில் நுழைந்த கட்டழகரைப் பாண்டியன் பலியிட்டான். அவர் மேல் எனக்கிருந்த அன்பு என்னைத் துறவியாக்கிற்று. \u003c\/p\u003e\u003cp\u003eஆனால் தமிழ்ப் பெண்ணைக் கேளுங்கள்  காதலிற்சிறந்தவளுக்கு ஒரு உதாரணம் கொடு என்று  \u003c\/p\u003e\u003cp\u003eஎன்னை வேசி, விபசாரி என்று வசைமாரி பொழிந்து நாடகம் நடத்துவார்கள். சிலப்பதிகாரம் தெரியாதவர்கள், சிந்தனையற்றவர்கள்....  \u003c\/p\u003e\u003cp\u003eகாதலுக்கு உதாரணம் இந்திரனைக் கூடிய கௌதமரிஷி மனைவி அகல்யாவும், சந்திரனைக் காமுற்ற பிரகஸ்பதி முனிவர் பத்தினி தாரையும் என்று...... கதை கூறுவார்கள்........ காதலுக்காக வாழ்வையே தியாகம் செய்த என்னைச் சொல்ல மாட்டார்கள்  \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஎன் காதலன் மதுரைக் காவலனால் கொல்லப் பட்டார் என்று கேட்டு மன்னனை நீதி கேட்டு, அம் மணிமுடியோன் தன் தவறையுணர்ந்து மாளச் செய்து, மதுரை நகரையே சாம்பலாக்கப் புறப்பட்டேன். என் மனாளனோடு இறப்புலகில் இன்பங் காண எண்ணினேன். நான் மட்டுமா...... \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53716696301841,"sku":"NIN9788198841049","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198841049.jpg?v=1782695637"},{"product_id":"arumbu-book-m-karunanidhi-9788198822925","title":"Arumbu","description":"\u003cp\u003e'மினி தொடர் கதை \u003c\/p\u003e\u003cp\u003eகுறுநாவல் \u003c\/p\u003e\u003cp\u003eஇவற்றில் எந்தப் பெயரை வேண்டுமானாலும் நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். \u003c\/p\u003e\u003cp\u003eகலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய நான்கு மணியான கதைகளை வெளியிடுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். \u003c\/p\u003e\u003cp\u003eமுதல் கதையின் பெயரே இந்த நூலின் பெயராக அமைகிறது. \u003c\/p\u003e\u003cp\u003eகலைஞரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை அழகிய நூல் வடிவில் கொணர்ந்து, அந்த அழியாத இலக்கியச் செல்வங்களைக் காப்பதில் தமிழ்க்கனி பதிப்பகம் மகிழ்ச்சி அடைகிறது. \u003c\/p\u003e\u003cp\u003eதமிழ் மக்களின் ஒத்துழைப்பும், உறுதுணையும் இடையறாது தொடர்ந்திட வேண்டுகிறோம். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதிருக்குவளைக் கிராமத்திற்கே இந்தக் கல்யாணம் மிகப் மிகப் புதிது   பழமையிலே ஊரிப்போனவர்கள் ஏராளம் இங்கே   அறிவுப் பாதையிலே நடைபோட வேண்டுமென்ற ஆசை ஒருபக்கம் இழுத்தாலும் இறந்த காலக் கொள்கைகளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண் டிருப்பவர்கள் அதிகம் நிறைந்த அழகான சிற்றூர்  ' அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் ஆலயத்துமணி வான் முட்டும் கோபுரம்-எதிரே சிங்காரத்திருக்குளம்-கரையிலே தென்னைகளும், திண்ணையுள்ள வீடுகளும் தென்றலுக்கு ஏற்றவகையில் தெற்கு நோக்கியமைந்த 'அக்கிரகாரம்  இப்படியெல்லாம் கலை அழகோடு ஆரியக் களையும் நிறைந்திருக்கும் ஊரிலேதான் இந்தப் புதுமையான திருமணத்தை நான் செய்து கொள்ளப்போகிறேன் நண்பா  சென்னையிலேயிருந்து இந்த ஊர் அதிக தூரம்தான்  ஆயினும் நாமிருவரும் மிக நெருங்கிய வர்களாயிற்றே  எப்படியும் அலுவலகத்தில் 'லீவு' பெற்றுக்கொண்டு நீ வந்தே தீரவேண்டும்-இது அன்பின் ஆணை  என்று கடிதத்தை முடித்திருந்தான் ரத்தினம்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகோகுலுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நாலைந்து வருடங்களாக அவன் எந்தத் திருமண விழாக்களுக்கும் போனதே கிடையாது. \u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53716699971857,"sku":"NIN9788198822925","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}]},{"product_id":"nalayini-book-m-karunanidhi-9788198837523","title":"Nalayini","description":"\u003cp\u003eஅழகான பெண், ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறாள். சிவந்த கழுத்திலே ஒரு கறுப்பு மணி மாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை - தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யௌவனத்தின் தனித்தன்மை வாய்ந்த அழகு ஊர்வலம்  இருள் படிந்த தெருவிலே அவள் நடந்து செல்வது - வையத்து மண்ணுக்கு வர விழைந்த வானத்துத் தாரகைதான் வந்துற்றதோ என எண்ணத் தோன்றியது  \u003c\/p\u003e\u003cp\u003eஅந்த ஜோதி மழை பொழியும் சொர்ணச்சிலையின் தலையிலே கூடை; கூடையிலோ துர்வாடை  ஆமாம் அழகியின் தலையில் ஓர் அழுகிய உருவம். கூடையின் அடிப்புறத்தைத் தாங்கியிருக்கும் அவள் இளங்கரங்கள் சுமை தாங்காமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அந்த சுந்தரவல்லி போய்க் கொண்டுதானிருக்கிறாள். சோகத்திலும் ஒரு சோபிதம் இருக்கிறது என்பதை அவளது எழில் வதனம் கவிஞர்கட்குக் காட்சியாக்கிக் கொண்டிருக்கிறது. கூடையிலே அமர்ந்துள்ள அழுகிய உருவமோ புன்னகை புரிந்தவண்ணமிருக்கிறது. \u003c\/p\u003e\u003cp\u003eஅந்தப் புன்னகை எதையோ ஓர் இன்பத்தை எதிர்பார்த்து மலரும் புன்னகை. புன்னகையில் விசாரத்தைக் காணவேண்டுமா ? ஆசைப்படுவோர் அந்த உருவத்தின் இனிப்பைப் பார்த்துக்கொள்ளலாம். கூடையிலே இருந்த அந்த உருவம் ஆண், தனக்கென உரிய உடலில் கால் பாகத்துக்கு மேல் இழந்து விட்ட மனிதன்; மகரிஷி  மௌத்கல்யர் என்னும் பெயருடைய மகான். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e'பெரிய' மனுஷன், 'பெரிய' ஆள், 'பெரிய' செல்வந்தன், 'பெரிய' பண்ணையார் என்பது போலப் 'பெரிய' வியாதி என்று ஒன்று உண்டே  அந்தப் பெருவியாதியால் பீடிக்கப்பட்டவர் அந்தப் பெரிய மகான். அவர்தான் தன்னுடைய அழகான மனைவியின் தலையில் ஏறிக்கொண்டு தெருவில் போகிறார். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53716702494993,"sku":"NIN9788198837523","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198837523.jpg?v=1782695665"},{"product_id":"perumoochu-book-m-karunanidhi-9788199034389","title":"Perumoochu","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736157118737,"sku":"NIN9788199034389","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199034389.jpg?v=1783186828"},{"product_id":"mudiyatha-thodarkathai-book-m-karunanidhi-9788198837578","title":"Mudiyatha Thodarkathai","description":"\u003cp\u003eமலர்ந்த பூவாடையென... \u003c\/p\u003e\u003cp\u003eதெளிந்த புனலோடையென... \u003c\/p\u003e\u003cp\u003eசித்திரப் பட்டாடையென... \u003c\/p\u003e\u003cp\u003eமுத்தமிழ்ப் பாலாடையென... \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eவித்தாரத் தமிழுலகறிந்த வியத்தகு எழுத்தரசராம் கலைஞரின் இதமான கருத்தோடை - இனிதான கனிச்சாறு - இந்நூல். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஒரு சமுதாயத்தை மாற்றமுறச் செய்யவும், உன்னத மானவொரு நிலைக்கு ஏற்றமுறச் செய்யவும் செறிவார்ந்த சிந்தனைகளின் மலர்ச்சியாம் எழுத்தோவியங்களால் முடியும் என்பதை அழுத்தமுறச் சாதித்துக் காட்டிய ஆற்றலுக்குரியவர் கலைஞர். இஃது ஒரு முப்பதாண்டுகளுக்கும் முன்பாகவே விமர்சன வீதியிலே- விவேக அரங்குகளிலே விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டு விட்ட முடிவாகும்; எழுதி வைத்துவிட்ட தீர்ப்பாகும். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅத்தகைய கலைஞரின் எழுத்தாற்றலுக்கு சொல் வண்ணம் பூசுவதென்பது கிளிச்சிறகு பொன்னுக்குப் பசுமையைத் தடவுவதாகவே ஆகும். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபடித்தவர்கள் நீங்கள்   - பகுத்தறிவுப் பாசறை யின் நூல்களை. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e-படிக்கப் போகின்றவர்கள் நீங்கள்  - பயன் தரும் பண்பார்ந்த பலப்பல நூல்களை. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅந்தப் பட்டியலில் இந்நூலுமொன்றாய் இணைய விழைகிறோம். \u003c\/p\u003e\u003cp\u003eபுரையோடிக் கிடக்கும் சமூகத்தைப் பொறுப்போடு கீறிக் கிளறி, கருத்துக் களிம்பிடும் இந்நூலைப் பதிப்பிக்கும் பேற்றினை வழங்கிய கொஞ்சு தமிழ்ப்புலச் செல்வராம் எங்களது நெஞ்சுகந்த நன்றி என்றும் கலைஞருக்கு உரித்தாகும். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eமணப்பந்தலில் மந்திரமோதிய வரதாச்சாரியார் சந்தான விருத்தி வாழ்த்துக்கூறத் தவறவில்லை. நெருப்பில் நெய்யை மொண்டுமொண்டு ஊற்றிக்கொண்டு 'புத்திர சந்தானம் பிராப்தி' என்பதைச் சமஸ்கிருதத்தில்தான் சொன்னார். மறந்தும் தமிழில் சொல்லிவிடவில்லை. ஆசீர்வாதம் பலந் தான். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736157315345,"sku":"NIN9788198837578","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198837578.jpg?v=1783186829"},{"product_id":"kalaignarin-por-muzhakkam-book-m-karunanidhi-9788199612983","title":"Kalaignarin Por Muzhakkam","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736157774097,"sku":"NIN9788199612983","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199612983.jpg?v=1783186831"},{"product_id":"poonthottamum-inamuzhakkamum-book-m-karunanidhi-9788199612976","title":"Poonthottamum Inamuzhakkamum","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736158232849,"sku":"NIN9788199612976","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}]},{"product_id":"yaaral-yaaral-yaaral-book-m-karunanidhi-9788199612990","title":"Yaaral Yaaral Yaaral","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736158396689,"sku":"NIN9788199612990","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}]},{"product_id":"idhaya-perigai-book-m-karunanidhi-9788199657595","title":"Idhaya Perigai","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736158658833,"sku":"NIN9788199657595","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199657595.jpg?v=1783186835"},{"product_id":"indiavil-oru-theevu-book-m-karunanidhi-9788199705968","title":"Indiavil Oru Theevu","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736158724369,"sku":"NIN9788199705968","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}]},{"product_id":"thiruvaalar-desiyam-pillai-book-m-karunanidhi-9788199645066","title":"Thiruvaalar Desiyam Pillai","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736159019281,"sku":"NIN9788199645066","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199645066.jpg?v=1783186836"},{"product_id":"por-murasu-book-m-karunanidhi-9788199677050","title":"Por Murasu","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736159183121,"sku":"NIN9788199677050","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199677050.jpg?v=1783186837"},{"product_id":"india-jananayagam-enge-pogirathu-book-m-karunanidhi-9788199645080","title":"India Jananayagam Enge Pogirathu","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736159248657,"sku":"NIN9788199645080","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199645080.jpg?v=1783186837"},{"product_id":"ponnaram-book-m-karunanidhi-9788199677029","title":"Ponnaram","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736159412497,"sku":"NIN9788199677029","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}]},{"product_id":"palli-vaazhkai-book-m-karunanidhi-9788199645028","title":"Palli Vaazhkai","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736159871249,"sku":"NIN9788199645028","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199645028.jpg?v=1783186839"},{"product_id":"ratha-kanneer-book-m-karunanidhi-9788199624399","title":"Ratha Kanneer","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736160035089,"sku":"NIN9788199624399","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199624399.jpg?v=1783186840"},{"product_id":"akkini-kunju-book-m-karunanidhi-9788199657571","title":"Akkini Kunju","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736160166161,"sku":"NIN9788199657571","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199657571.jpg?v=1783186840"},{"product_id":"viduthalaikilarchi-book-m-karunanidhi-9788199677081","title":"Viduthalaikilarchi","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736160592145,"sku":"NIN9788199677081","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}]},{"product_id":"ina-unarvu-book-m-karunanidhi-9788199705975","title":"Ina Unarvu","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736160854289,"sku":"NIN9788199705975","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}]},{"product_id":"ore-raththam-book-m-karunanidhi-9788199624382","title":"Ore Raththam","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736161116433,"sku":"NIN9788199624382","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199624382.jpg?v=1783186844"},{"product_id":"thiyaga-varalaru-book-m-karunanidhi-9788199657519","title":"Thiyaga Varalaru","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736161083665,"sku":"NIN9788199657519","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199657519.jpg?v=1783186844"},{"product_id":"mukkani-book-m-karunanidhi-9788199657526","title":"Mukkani","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736161378577,"sku":"NIN9788199657526","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199657526.jpg?v=1783186846"},{"product_id":"nachu-koppai-book-m-karunanidhi-9788199777439","title":"Nachu Koppai","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736162165009,"sku":"NIN9788199777439","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199777439.jpg?v=1783186848"}],"url":"https:\/\/www.worldofbooks.com\/collections\/author-books-by-m-karunanidhi.oembed","provider":"World of Books ","version":"1.0","type":"link"}